நம் உரையாடல்கள்

இன்றைய பொழுது கழிந்ததெப்படி என்ன உண்டாய் என்ன உடுத்தினாய் என்ன உணர்ந்தாய் பக்கத்து வீட்டு குழந்தை தந்த முத்தம் படித்து முடித்த கதையின் சுருக்கம்  தங்கையுடன் போட்ட சண்டை தாய்மடியில் தாலாட்டிய தூக்கம் எல்லாவற்றையைம் பட்டியலிட்டு  காத்திருந்து தொலைபேசியில் அழைக்கும் நொடிகளில் அன்பின் அலையில் அமிழ்ந்து மௌன ஓசையில் கரைந்து போகிறேன் நான் (இப்படித்தான் விவேகானந்தர் காளியிடம் கேட்க என்று பட்டியலிட்டு, காளியைப் பார்த்ததும் ஞானம் மட்டும் போதுமென்பாராம்)

உருமாற்றம்

எனக்குள்ளே வெறுமை எனக்குள்ளே துக்கம் எனக்குள்ளே மௌனம் எனக்குள்ளே தனிமை என எல்லாவற்றையும் பூட்டி வைத்தேன் நீ வரும் நாளில் பட்டாப்பூச்சிகளாய்ப் பறக்கவிட

என் அன்புகள்

உன்முகத்தை வருடும் தென்றல் என் முத்தங்களாய் இருக்கட்டும் கண்களில் படும் காலைக் கதிர்கள் என் கண்களாய் இருக்கட்டும் கழுத்தில் வழியும் வியர்வைத்துளி கைவிரல்களாய் இருக்கட்டும் இரவில் தாலாட்டும் நித்திரை என் தழுவலாய் இருக்கட்டும்

ஊமை இரவு

உன்னோடு கழித்தஇரவுகள் என்றால் ஊருக்கோரு பொருள் உனக்கும் எனக்கும் வேறு பொருள் உன்னோடு பேசிக் கழித்த இரவுகள் என உண்மை விளம்பினாலும் சந்தேகக் கேள்வி சந்திக்குள் தொக்கி நிற்கும்   ஊமைகளாகவே இருந்துவிட்டுப் போவோம் உனக்கும் எனக்கும் ஒரே பொருள்

எங்கும் நீ

கண்பார்வை படுமாறு இல்லாதிருந்தாலென்ன வண்ணமெல்லாம் நீ என் ஒலி கேட்கும் தொலைவில் இல்லாதிருந்தாலென்ன எண்ணமெல்லாம் நீ   கைக்கெட்டும் தூரத்தில் இல்லாதிருந்தாலென்ன கருத்தெல்லாம் நீ   மெய் அணைக்கும் அணுக்கம் இல்லாதிருந்தாலென்ன உயிரெல்லாம் நீ

மழை – பாரதி

திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட பக்க மலைகள் உடைந்து - வெள்ளம் பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட தக்கத் த்திங்கிடதித்தோம் - அண்டம்  சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு தக்கையடிக்குது காற்று - தக்கத்  தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட வெட்டியடிக்குது மின்னல், கடல் வீரத் திரைகொண்டு விண்ணையிடிக்குது கொட்டியிடிக்குது மேகம் - கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று சட்டச் சட … Continue reading மழை – பாரதி

ஒரு கணம்

முதலா இல்லை முடிவா தொடர்வா இல்லை கரை தொட்டுப் போகும் அலையா   கடல் நீயா கரை நானா அலை இக்கணமா கால் நனைத்து கை நனைத்து கண் துளிர்ந்து முகம் மலர்ந்தேன் கடலோடு கரைவதா கரையோடு உறைவதா கணநேரம் தடுமாறி மனந் தெளிந்தேன் எடுத்து வைக்கும் அடியிலெல்லாம் போகுமிடம் புரிவதில்லை அடுத்த அடி இடறுமென்று இருக்குமிடம் இருப்பதில்லை